மேலும் அறிய

நிதி மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் - 2 காவலர், கல்வித்துறை அலுவலர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் அதிக லாபம் அளிப்பதாக கூறி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட இரு போலீஸார் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி
 
காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா, இவரது தம்பி ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராக காஞ்சிபுரத்தில் பணி புரிகிறார். மற்றொரு தம்பி இருதயராஜ் காவல் பணியில் இருந்தவர். அவர் அந்தப் பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி செய்கிறார். இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி
 
40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி
 
இவர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரு நிறுவனங்களின் விற்பனை உரிமை எடுப்பது, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர். இதுபோல் போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் கூறி அவர்களிடம் இருந்து ரூ.40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சகாயபாரத், அவரது மனைவி சௌமியா, இருதயராஜ் அவரது மனைவி ஜெயஸ்ரீ, இவர்களின் தாயார் மரியச்செல்வி ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். 
 
district crime branch police arrested 8 members of his family, including two policemen who were involved in fraud by collecting funds claiming to give high profits in Kanchipuram Crime : போலீஸ்காரங்க கூட இப்படி பண்ணா என்ன அர்த்தம்...! அட போங்கப்பா, அதிரடி காட்டிய எஸ்.பி..!
 
8 பேர் கைது
 
போக்குவரத்து காவலர் அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் மூவரையும் இன்று  கைது செய்தனர். நிதி மோசடி வழக்கில் போலீஸார் குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட சமம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது முதல் கட்ட விசாரணையை நாங்கள் செய்து வருகிறோம். இதன் பின்னர் இது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்றார்.
 
கைதான இரு காவலர்கள் பணியிடை நீக்கம்
 
காஞ்சிபுரத்தில் பல்வேறு நபர்களிடம் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்வதாக கூறி 40 கோடி வரை பணம் பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி புரிந்து வந்த  சகாயபாரத், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த ஆரோக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கப்பட்டதாகவும், பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி வரும் குற்றவாளி இருதயராஜ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ஐ.பி.எஸ். ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பலர் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில் தற்போது இவர்களிடமும் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் போலீஸாராக இருப்பதால் காவல்துறையில் பணி செய்யும் பலர் இவர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget