மேலும் அறிய
வேளாங்கண்ணி அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
வேளாங்கண்ணி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். கடத்தலில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது.
நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான
காவல்துறையினர் சின்னதும்பூர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது சுமார் 30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட 10 பெட்டிகளில் கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், பாப்பா கோவிலை சேர்ந்த சகோதரர்கள் சிங்காரவேல் மற்றும் அவரது தம்பி கேசவன் ஆகியோர் அக்கரைப்பேட்டையில் இருந்து டாடா ஏசி வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு கடல் அட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து, இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய சில நபர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து ராமேஸ்வரம் கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் கைது செய்யப்பட்டவர்களையும் வேளாங்கண்ணி போலீசார் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர் அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion