Crime: 8 துண்டுகளாக வெட்டப்பட்ட இளைஞர்... வீடியோ எடுத்து பாக். பயங்கரவாதிக்கு அனுப்பிய கொலையாளிகள்! அதிர்ச்சி பின்னணி!
தலைநகர் டெல்லி 21 வயதுடைய இளைஞர் ஒருவர் எட்டு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Crime : தலைநகர் டெல்லியில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் எட்டு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உடல் எட்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்ததுள்ளது. இதில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிர்ச்சிக்குரிய ஒரு வீடியோவை இணையத்தில் போலீசார் பார்த்துள்ளனர். அதில் ஒரு நபரை இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். 37 நிமிட வீடியோவை பார்க்கும்போது காவல்துறைக்கு அது பயங்கரவாத அமைப்பு பாணியில் கொலை நடத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்பில் நவ்ஷத் மற்றும் ஜக்ஜீத் சிங் என்ற இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
Delhi Special cell caught 2 terrorists, Naushad & Jagjit, on Jan 12 from Jahangirpuri & recovered 2 military-grade hand grenades, 3 pistols & cartridges. They killed a man in December 2022 only to demonstrate their capabilities to their handlers: P Kushwaha, Addl CP, Special Cell pic.twitter.com/3dgO7L47ag
— ANI (@ANI) January 15, 2023
பாக். பயங்கரவாதிக்கு அனுப்பிய வீடியோ
இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த வகையில், இளைஞரிடன் அவர்கள் நட்புடன் பழகி உள்ளனர். டிசம்பர் 14ஆம் தேதி அந்த இளைஞரை ஆதர்ஷ் நகரில் இருந்து பால்ஸ்வா டெய்ரியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த நபரை இருவரும் கொலை செய்துள்ளனர். அந்த நபரின் உடலை எட்டு துண்டுகளாக வெட்டியுள்ளனர். கொலை செய்வதை வீடியோவாக எடுத்து அதை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பிடம் தொடர்புடைய சொஹைல் என்ற நபருக்கு அனுப்பி உள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.
பயங்கராவாதிகளுடன் தொடர்பு?
இந்த வழக்கில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவருமே பயங்கரவாதி என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல வழக்குகளில் நீண்ட காலமாக சிறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து 22 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகளை போலீசார் மீட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஐஹாங்கிர்புரியில் வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.