மேலும் அறிய

Crime: "காதலன் உனக்குத்தான்" 40 சவரன் மோசடி..! அட இப்படி கூடவா ஏமாறுவாங்க..! பெண்களே உஷார்..

உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

" ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ் "
 
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்காக, பல்வேறு இணையதளங்களை ஆய்வு வந்துள்ளார். இப்போது 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' என்ற செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து சென்னை இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்தார்
 
40  சவரன் நகை
 
இதையடுத்து அந்த இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட, இரண்டு பேர் சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று பணம் அல்லது தங்கநகை கேட்டுள்ளனர். இந்த இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து, அவர்களிடம் கொடுத்தார்.
 

Crime:
"தவறாக இணையதளத்தில் சித்தரித்து விடுவோம்" 
 
தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை, காதலனோடு இவரை சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ரூபாய் ஐந்து லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம், என்று மிரட்டினர். இதனால் பதறிப் போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 
 
" கண்ணீரோடு புகார் அளித்த பெண்" 
 
அதன்பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த இளம் பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர். அந்த இளம் பெண் அந்த இளைஞர்களிடம்,  ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த, அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணத்தை  கொடுக்கிறேன் என்று பேசச் செய்தனர். அந்த இளைஞர்களும் அதற்கு சென்னை வருவதாக கூறினார்.
 
"திட்டத்தில் சிக்கிய இருவர்"
 
 
அந்த இளைஞர்கள் இருவரும்  விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தனர். போலீசார் சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர். அதோடு சாதாரண உடை அணிந்த போலீசார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இளம் பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோசத்தில் பஞ்சாபில் இருந்து விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி  வளைத்து பிடித்து கைது செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

Crime:
 
இதேபோன்று பல மோசடிகள்....
 
அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்திய போது, இவர்கள் இதைப்போல் இந்த போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இவர்கள் இருவரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget