மேலும் அறிய

குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி 2.30 கோடி மோசடி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்... அதிர்ச்சி தகவல்

போலி கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு லோன் பெற்றுத் தருவதாக கூறி புதுச்சேரி, தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்கள் கைது.

புதுச்சேரி: போலி கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு லோன் பெற்றுத் தருவதாக கூறி புதுச்சேரி, தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

போலி கால் சென்டர் நடத்தி மோசடி

கால் சென்டர் நடத்தி, குறைந்த வட்டிக்கு லோன் பெற்றுத் தருவதாக கூறி புதுச்சேரி, தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் திருக்கனுாரை சேர்ந்தவர் சங்கர். இவரை, 2 மாதத்திற்கு முன் செல்போனில் தொடர்பு கொண்ட பெண், பிரபல வங்கியில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் 50 ஆயிரம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று தருவதாக கூறினார்.

அதனை நம்பிய சங்கர், கடன் பெற ஆதார், பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார். பின், தொடர்பு கொண்ட அந்த பெண், 10 லட்சம் ரூபாய் கடன் பெற தகுதி உள்ளதாகவும், செயலாக்க கட்டணம் 71 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறினர். அதனை சங்கர், பல தவணைகளில் செலுத்தியுள்ளார். அதன்பிறகு, அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடி

இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், சென்னை ரெட் ஹில்ஸ் மற்றும் புழல் பகுதியில் 'நியூ கோல்டன் எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில் கால் சென்டர் நடத்தி குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்து வருவது தெரிய வந்தது.

அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று, போலி கால் சென்டர் நடத்தி பலரிடம் மோசடி செய்த சென்னை, வடகரை, எஸ்.எஸ்.பாபா நகர் மகேஸ்வரன் மனைவி சசிகலா பொன் செல்வி (37) சென்னை, புழல், சக்திவேல் நகர் செல்வகுமார் மனைவி முனிராதா, (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சிம் கார்டுகள், 17 மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடி பணத்தில் சொகுசு கார்கள்

மேலும், இவர்கள் கடந்த ஓராண்டாக போலி கால் சென்டர் மூலம் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பலரிடம் 2.30 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக புதுச்சேரியில் இதுவரை 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், மோசடி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கியும், ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் இன்சென்டிவ் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget