மேலும் அறிய

Crime: காதலித்ததால் ஆத்திரம்.. 16 வயது மகளை ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஓசூர் அருகே காதலை கைவிட மறுத்த 11 ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே பாகலூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பட்வாரப்பள்ளி என்ற கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் மனைவி காமாட்சி மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் 16 வயதான மகள் பாகலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற அம்மாணவி திரும்ப வீட்டுக்கு வரவில்லை. 

இதனால் பதற்றமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி பல்வேறு இடங்களில் மகளை தேடினர். இதற்கிடையில் பட்வாரப்பள்ளி கிராமம் அருகே உள்ள ஏரிப்பகுதியில் அம்மாணவி உயிரிழந்த நிலையில் தண்ணீரில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் பாகலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்ற பிரிவில் விசாரணை நடத்தினர். 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, ‘உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இந்த குற்றச் சம்பவம் பெற்றோர்களால் செய்யப்பட்டுள்ளது. மாணவியும் முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அம்மாணவி காதலை கைவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகிய  இருவரும் தங்கள் மகள் என்று கூட பாராமல் அம்மாணவியை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக நாடகமாடினர்’ என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget