மேலும் அறிய

இனி 28 நாட்கள் இல்லை.. 30 நாட்களுடன் ரீசார்ஜ் திட்டம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு!

ரீசார்ஜ் திட்டங்களைப் பொறுத்தவரை இணைய வசதியுடன் மாதாந்திர, 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் வரையிலான திட்டங்கள் கணக்கிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு மாதம் 28 நாட்கள் என கணக்கிடப்படுகிறது.

செல்போன் ரீசார்ஜ் திட்டங்களுக்கான புதிய விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)  அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் - ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் கீழும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இருந்து வருகின்றனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின் படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான ரீசார்ஜ் கட்டணம் தொடங்கி ஸ்பேம் அழைப்புகளை அறிந்து கொள்வது வரை பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது செல்போன் நிறுவனங்களுக்கான விதிகளை மாற்றும். தற்போது ரீசார்ஜ் திட்டங்களுக்கான விதிகளில் திருத்தம் செய்துள்ளது. 

ரீசார்ஜ் திட்டங்களைப் பொறுத்தவரை இணைய வசதியுடன் மாதாந்திர, 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் வரையிலான திட்டங்கள் கணக்கிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு மாதம் 28 நாட்கள் என கணக்கிடப்படுவதால் வருடத்திற்கு 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களை மிகப்பெரிய சிரமத்தில் தள்ளியது. தற்போது திருத்தம் செய்துள்ள மாற்றங்களின்படி, “இணைய வசதி இல்லாமல் அதற்கேற்ப கட்டணங்களைக் குறைத்து அதிக ரீசார்ஜ் தேர்வுகளை வழங்க வேண்டும். இந்த மாற்றங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் வீட்டில் வைஃபை வசதி வைத்திருப்பவர்கள், சாதாரண செல்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நன்மையளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  எனவே இனிமேல் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுடன் கூடிய தொகுப்புத் திட்டங்களை 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வழங்க வேண்டும். வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்கள் மட்டுமே இருக்கும்படியாக தொகுப்பு இருக்க வேண்டும். இவை அனைத்தும் குறைந்த விலையில் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் மெசெஜ் மட்டுமே இருக்க வேண்டிய திட்டங்களுக்கு மிகக் குறைந்த கால அளவுடன் திட்டம் வைத்துள்ளது. இணைய வசதியுடன் கூடிய திட்டத்திற்கு அதிக கால நீட்டிப்பு செய்கிறது. இதனையெல்லாம் கவனித்த பின் தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.299 திட்டத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்தால் வருடத்திற்கு ரூ.3,887 செலவாகும். அதே விலையில் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு திட்டம் இருந்தால்  360 நாட்களில் 12 ரீசார்ஜ்களுக்கு ரூ.3,588 செலவாகும். இதனால் ரூ.300 வரை செலவு குறையும். இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் அல்லது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
Gold and silver rate today : தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு.! சவரனுக்கு ரூ.1,880 குறைந்தது – நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (25.09.2026): கேரளா Suvarna Keralam SK-71 லாட்டரி- இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் யார்?
LIVE | Kerala Lottery Result Today (25.09.2026): கேரளா Suvarna Keralam SK-71 லாட்டரி- இன்று குலுக்கல்! கோடீஸ்வரர் யார்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.?-வழிமுறை இதோ..
தாய் மாமன் சீர்.! ஒரு கிராம் தங்க மோதிரம் பெற தகுதிகள் என்ன.? தேவைப்படும் ஆவணங்கள்.? வழிமுறை இதோ..
ThaiMaaman Thanga Mothiram Thittam : ’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
’தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி’ தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்கும் முதல்வர் விஜய்..!
RAIN ALERT : ஆபீஸ் முடிஞ்சதும் தாமதிக்காதீங்க! மாலையில் இடி,மழை வெளுக்கப்போகுது.! எங்கெல்லாம்.? வெதர்மேன் அலர்ட்
ஆபீஸ் முடிஞ்சதும் தாமதிக்காதீங்க! மாலையில் இடி,மழை வெளுக்கப்போகுது.! எங்கெல்லாம்.? வெதர்மேன் அலர்ட்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Renault Triber: நாட்டின் மலிவான 7 சீட்டரில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை இறக்கிய ரெனால்ட் - விலை, மைலேஜ் விவரங்கள்
நாட்டின் மலிவான 7 சீட்டரில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை இறக்கிய ரெனால்ட் - விலை, மைலேஜ் விவரங்கள்
Embed widget