Stock Market Update: கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை : சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி..
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
பங்குச்சந்தை:
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 930.88 அல்லது 1.30 % புள்ளிகள் சரிந்து 70,506.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 302.95 அல்லது 1.41 % சரிந்து 21,150.15 ஆக வர்த்தகமாகியது.
இன்றைய (20.12.2023) வர்த்த நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி கடுமையான சரிவை எட்டியது. கடந்த வாரங்களில் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இந்நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நெருங்கி வரும் நிலையிலும் பங்குச்சந்தை பரபரப்பாக இயங்கி வருகிறது. அதே போலவே இந்திய பங்குச்சந்தையும் அப்படியே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் -ல் 30 நிறுவனங்களின் பங்குகள் 1000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. நிஃப்டி 21,150 புள்ளிகளாக சரிந்த்து. உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதோடு ஐ.பி.ஒ. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் பங்குகளின் விற்பனை ஆகியவற்றின் காரணமாக பிற்பகல் வர்த்தக நேரத்தில் பங்குச்சந்தை கடும் சரிவை கண்டது. இன்றைய காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 476 புள்ளிகள் இயர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. நிஃப்டி புதிதாக 21,593 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 614 கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. இதன் காரணமாகவும் பங்குச்சந்தை சரிவைடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் காரணம்.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஒ.என்.ஜி.சி., டாடா கான்ஸ் ப்ராட், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், யு.பி.எல்., டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், ஹெச்.டி.எஃப்.சி. டெக், டாடா மோட்டர்ஸ்,ஈச்சர் மோட்டர்ஸ், எம் அண்ட் எம்., ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ., டிவிஸ் லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, பவர்கிரிட் கார்ப், க்ரேசியம், டெக் மஹிந்திரா, லார்சன், ஜெ.எஸ்.டபுள்யூ., பஜாஜ் ஸ்டீல், பாரதி ஏர்டெல், விப்ரோ, மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ், நெஸ்லே, ஐ.டி.சி., கோடாக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், எஸ்.பி.சி. லைஃப் இன்சுரா, டாக்டர். ரெட்டி லேப்ஸ், சன் பார்மா, டி.சி.எஸ்., ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, இண்டஸ்லேண்ட் வங்கி, சிப்ளா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடன் வர்த்தகமாகியது.