Share Market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... முதலீட்டாளர்கள் கவலை...சரிவில் டி.சி.எஸ், விப்ரோ பங்குகள்...
Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை சரிவுடன் தொடங்கி உள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 243 புள்ளிகள் குறைந்து 60,504.30 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 61.75 புள்ளிகள் குறைந்து 18,039.45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
Sensex declines 243 points to 60,504.30 points in early trade; Nifty falls 61.75 points to 18,039.45 points
— Press Trust of India (@PTI_News) January 10, 2023
லாபம்-நஷ்டம்
டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, பிரிட்டானியா, ஏசியன் பையின்ட்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, எச்சிஎல் டெக், இன்போசிஸ், கோடக் மகேந்திரா, என்டிபிசி, ரிலையன்ஸ், நெஸ்டிலே, டெட்டன் கம்பெணி, ஐசிஐசிஐ வங்கி, யுபிஎல், சிப்ளா, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்ளின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ், ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், ஓன்ஜிசி, அப்போலோ மருத்துவமனை, எம்எம், பிபிசிஎல், கோல் இந்தியா, பஜாஜ் பின்சர்வ், கிராசிம், சன் பார்மா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
நேற்றைய பங்குச்சந்தையில் 846.94 புள்ளிகளும், நிப்ஃடி 241.75 புள்ளிகளும் உயர்ந்துள்ளதது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே நிலைமை இன்றும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்களை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 11 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.
ரூபாயின் மதிப்பு:
Rupee rises 15 paise to 82.20 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) January 10, 2023
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 82.20 ரூபாயாக உள்ளது.