SBI WhatsApp Banking : இனி Whatsapp-இல் கூட SBI வங்கி சேவையை பெறமுடியும்.. நீங்க செய்யவேண்டியது இதுதான்!
முதலில் நீங்கள் registration செய்ய வேண்டும் . அதற்கு WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு......
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய WhatsApp வங்கி சேவைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பேலன்ஸ், பண பரிவர்த்தனை விவரம் உள்ளிட்ட சில மினி அறிக்கைகளையும் பார்க்கலாம். வாட்ஸ் அப் மூலம் பாதுகாப்பான வங்கி சேவைகளை பெறலாம் என பாரத ஸ்டேட் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்காக தனது புத்தம் புதிய வாட்ஸ்அப் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிமுறைகளை அவர்கள் அறிந்து கொள்வது அவசியம். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Your bank is now on WhatsApp. Get to know your Account Balance and view Mini Statement on the go.#WhatsAppBanking #SBI #WhatsApp #AmritMahotsav #BhimSBIPay pic.twitter.com/5lVlK68GoP
— State Bank of India (@TheOfficialSBI) July 19, 2022
எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை பயன்படுத்துவது எப்படி ?
- முதலில் நீங்கள் registration செய்ய வேண்டும் . அதற்கு WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு வங்கி கணக்கு எண்ணை பதிவிட்டு, 7208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். மொபைல் எண் வங்கி இணைப்பில் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும் .
- எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளில் பதிவு செய்யப்படுவீர்கள். 90226 90226 என்ற எஸ்பிஐ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும்.அந்த எண்ணை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
- SBI - 90226 90226 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ஹாய் எஸ்பிஐ என்று செய்தி அனுப்பவும் அல்லது பயன்பாட்டில் நீங்கள் முன்னதாக பெற்ற செய்திக்கு பதில் அனுப்பவும். இப்போது நீங்கள் கீழ்கண்ட குறுஞ்செய்தியை பெறுவீர்கள் . அதன் மூலம் உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து நொடிப்பொழுதில் உங்களின் தேவையை அறிந்துக்கொள்ளலாம்.
Dear Customer,
Welcome to SBI Whatsapp Banking Services!
Please choose from any of the options below.
- Account Balance
- Mini Statement
- De-register from WhatsApp Banking
Dear Nadean, thank you for showing your interest in our banking services over WhatsApp. We request you send "Hi" on our WhatsApp number - 9022690226 and follow the instructions sent by us. If you find any issue, please get in touch with us. We will be happy to assist you.
— State Bank of India (@TheOfficialSBI) July 21, 2022