மேலும் அறிய
Advertisement
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு; சரிவிற்கு முற்றுப்புள்ளி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து தொடர் சரிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக தொடர் சரிவைக் கண்டு வந்த ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்திருக்கிறது. இந்த திடீர் எழுச்சிக்கு ஏற்றுமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் 72 ரூபாய் 51 பைசவாக இருந்த ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 73 ரூபாய் 33 பைசாவாகவும் குறைந்தபட்சமாக 72 ரூபாய் 53 பைசா வரையிலும் சென்றது.
கடந்த வியாழக்கிழமை 72 ரூபாய் 62 காசுகளாக இருந்த டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு, நேற்று 72 ரூபாய் 51 பைசாவாக உயர்ந்தது. மூலதனச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 3,382.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதுபோல கச்சா எண்ணெயின் விலையும் பேரல் ஒன்றுக்கு 2.10 சதவீதம் உயர்ந்து 63.25 டாலர்களாக அதிகரித்துள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion