மேலும் அறிய

பங்குதாரர்கள் எதிர்ப்பையும் மீறி அராம்கோ நிர்வாகியை தலைவராக நியமித்த ரிலையன்ஸ்

சவூதி அராம்கோ உடனான ரிலையன்சின் மற்றொரு ஒப்பந்தத்திற்கும் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், எண்ணெய் வணிகத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதால் யாசிர் நியமனம் செய்யப்பட்டதாக ரிலையன்ஸ் விளக்கம்

இந்தியாவின் பெரும் பணக்காரனான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கௌரவ தலைவர் யாசீர் அல் ருமய்யானை இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன இயக்குனராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.  யாசீர் அல் ருமய்யானை சுயாதீன இயக்குநராக நியமிப்பதற்கு எதிராக வாக்களிக்க இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சில பங்குதாரர்கள் முடிவு செய்தனர்.

குறிப்பாக கலிபோர்னியா மாநில ஆசிரியர்கள் ஓய்வூதிய நிதி மற்றும் புளோரிடாவின் மாநில நிர்வாக சபை யாசீர் அல் ருமய்யான் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவுக்கு எண்ணெயில் இருந்து இரசாயனம் எடுக்கும் வணிகத்தில் 20% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் திட்டம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனம் அராம்கோ கௌரவ தலைவர் யாசிர் அல் ருமாய்யானை இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன தலைவராக நியமிக்க ஆதரவு தெரிவித்து இருப்பதாக  கிளாஸ் லெவிஸ் நிறுவனம் குற்றம்சாட்டி இருக்கிறது. அத்துடன் பல்வேறு பரிந்துரைகளையும் கிளாஸ் லெவிஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த பரிந்துரைகளை கேட்ட பிறகே கலிபோர்னியா மாநில ஆசிரியர்கள் ஓய்வூதிய நிதி மற்றும் புளோரிடாவின் மாநில நிர்வாக சபை யாசீர் அல் ருமய்யான் நியமனத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றன.

பங்குதாரர்கள் எதிர்ப்பையும் மீறி அராம்கோ நிர்வாகியை தலைவராக நியமித்த ரிலையன்ஸ்

இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், "சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அராம்கோவின் கௌரவ தலைவர் யாசிர் அல் ருமைய்யானுக்கு நாங்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து இந்திய சில்லறை எண்ணெய் வணிக கூட்டியக்கத்தின் சுயாதீன இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டதற்கும்,  சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் உடனான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஒப்பந்தத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. எண்ணெய் வணிகத்தில் நீண்டநெடிய அனுபவம் உடையவர் என்ற ஒரே காரணத்துக்காக யாசிர் அல் ருமைய்யான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்” என அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

எங்கள் பங்குதாரர்கள் அங்கீகரித்ததன் அடிப்படையிலேயே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்  எண்ணெயிலிருந்து ரசாயணம் தயாரிக்கும் வணிகத்தின் 20% பங்குகளை அராம்கோவிடம் விற்பதாகவும், அது துணை நிறுவனமாக மாற்றப்பட இருப்பதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்து உள்ளது. அதே போல், O2C எனப்படும் எண்ணெயிலிருந்து ரசாயணம் தயாரிக்கும் துணை நிறுவனத்தின் பங்குகளிலும் சவூதி அராம்கோ நிறுவனம் பங்கேற்கும் என ரிலையன்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் மூன்று வருட காலத்திற்கு சுயாதீன இயக்குனராக யாசிர் அல் ருமய்யானை ரிலையன்ஸ் நிறுவனம் நியமித்தது. நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் ருமய்யானின் நியமனம் குறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.  மேலும் நிறுவன பங்குகளில் 50% க்கும் அதிகமானதை ரிலையன்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாசிர் அல் ருமய்யான் நியமனத்தை உறுதிப்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு அக்டோபர் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget