மேலும் அறிய

Petrol-Diesel Price: வார இறுதியில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 121-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் இந்தியாவில் நீண்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் மார்ச் 8ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு அடைய உள்ளன. ஆகவே அதன்பின்னர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது. 

Petrol-Diesel Price: வார இறுதியில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்

கச்சா எண்ணெய்:

டாலருக்கு நிகரான கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் இன்று கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் அதிரடி விலை ஏற்றம் இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியா தன்னுடைய 85 சதவிகித எண்ணெய் தேவையை இறக்குமதி செய்து கொள்கிறது. அதேபோல் 55 சதவிகித எரிவாயு தேவையையும் இறக்குமதி செய்து வருகிறது. ஆகவே இந்தியாவிற்கு இது பெரிய சிக்கலாக அமையும். 

பணவீக்கம்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க கூடும். இது பொதுமக்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே கடந்த வாரம் மத்திய அரசு ஏறி வரும் கச்சா எண்ணெயின் விலை தொடர்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தது. 

அத்துடன் தொடர்ந்து டாலருக்கு நிகரான கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பெட்ரோலுக்கான கலால் வரியை குறை திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் ஏற்கெனவே இறக்குமதி செய்து எண்ணெய் கிணறுகளில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கும் எண்ணெயை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்தியா-ஈரான் உடனான எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு உலை ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று சில வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget