மேலும் அறிய

Petrol and diesel prices Today: தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மூன்றாவது நாளாக அதிகரித்து விற்பனையாகி வருகிறது

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காமல் இருந்த நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு  ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

கடந்த 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது.


Petrol and diesel prices Today: தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

அதனைத்தொடர்ந்து, நேற்று சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசு அதிகரித்து ரூ.92.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசு அதிகரித்து ரூ.86.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலிம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.92.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசு அதிகரித்து ரூ.86.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.

கடந்த சில நாட்களாக விலை நிலையாக இருந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் அவர்கள் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என வாகன ஓட்டிகள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக திடீரென பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

திமுக அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வழி செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என அவர்கள் நம்புகின்றனர். ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைப்பார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இந்த விலை ஏற்றம் 5 மாநில தேர்தலுடன் ஒப்பிடப்படுவதால், அந்தந்த மாநிலங்களின் தலைவர்களும் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என வாகன ஓட்டிகள் நம்புகின்றனர். அதை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

இந்நிலையில் இன்று உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலை, இன்றோடு நிறைவு பெற போவதில்லை. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு முன்பாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு முன்வர வேண்டும் என்கிற கோிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget