மேலும் அறிய

Petrol and diesel prices Today: இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

தொடர்ந்து 24-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. பெட்ரோல் தொடர்ந்து 24 ஆவது நாளாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசலும் எந்த மாற்றமுமின்றி ரூபாய் 94.39 என்ற விலையிலே விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம்:

இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் தற்போது வரை பெட்ரோல் நுகர்வு விலையில் 40 சதவீத உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த காலகட்டங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 27 சதவீத விலை சரிந்துள்ளது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 


Petrol and diesel prices Today: இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல் (மே 2), தற்போது வரை கிட்டத்தட்ட 40 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? - பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
உங்களிடம் இந்தத் தகுதி இருக்கா? உடனே அப்ளை பண்ணுங்க... ரூ.1 கோடி வரை அரசாங்க மானியம்! 
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!
Gold Rate: காலையிலேயே நகைக்கடைகளில் குவிந்த மக்கள்! ஒரே நாளில் ரூ.1,240 சரிவு! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget