மேலும் அறிய

Petrol and diesel prices Today: நோ மாற்றம்... நோ முன்னேற்றம்... அதே விலையில் பெட்ரோல், டீசல்!

சென்னையில் தொடர்ந்து இன்றும் பெட்ரோல் விலை ரூபாய் 102.49க்கும், டீசல் ரூபாய் 94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. பெட்ரோல் தொடர்ந்து 19ஆவது நாளாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசலை பொறுத்தவரை தொடர்ந்து 20ஆவது நாளாக எந்த மாற்றமுமின்றி ரூபாய் 94.39 என்ற விலையிலே விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம்:

இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் தற்போது வரை பெட்ரோல் நுகர்வு விலையில் 40 சதவீத உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த காலகட்டங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 27 சதவீத விலை சரிந்துள்ளது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 


Petrol and diesel prices Today: நோ மாற்றம்... நோ முன்னேற்றம்... அதே விலையில் பெட்ரோல், டீசல்!

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல் (மே 2), தற்போது வரை கிட்டத்தட்ட 40 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi MLA: தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
தவெக MLA மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசில் புகார்..! வெளியான பகீர் தகவல்
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
செஞ்சி ஹேமலதா மாயமான வழக்கு: 44 நாட்களாகியும் கிடைக்காத சிறுமி - தாய் பவானி கண்ணீர் பேட்டி
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Cheran:
Cheran: "மன நோயாளி.. கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது.." வாட்டர்மெலன் ஸ்டாரை விளாசித் தள்ளிய சேரன்!
VinFast VF5: 370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
370KM ரேஞ்ச், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் - மிடில் க்ளாஸ் ஃபேமிலிக்கான பட்ஜெட் மின்சார கார் - முழு விவரம்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Embed widget