மேலும் அறிய

Petrol, Diesel Price : வாரத்தின் முதல்நாள் விலை மாற்றம் உண்டா? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

சென்னையில் 93வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  


Petrol, Diesel Price : வாரத்தின் முதல்நாள் விலை மாற்றம் உண்டா? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 93வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை.- இன்றைய விலை நிலவரம் இதோ..

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget