மேலும் அறிய

Petrol, Diesel Price : சென்னையில் 9வது நாளாக மாற்றமின்றி விற்கப்படும் பெட்ரோல், டீசல்...!

Petrol, Diesel Price : சென்னையில் 9வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 9வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் சென்னையில் கடந்த 16 நாட்களில் 14வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. 

முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.

Petrol, Diesel Price : சென்னையில் 9வது நாளாக மாற்றமின்றி விற்கப்படும் பெட்ரோல், டீசல்...!

நஷ்டத்தை ஈடுகட்ட ஏற்பாடு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை மீறி உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த  நிலையில், நான்கு மாதங்களுக்கும் மேலாக விலையை சீராக வைத்திருந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 140 டாலர் உயர்ந்துள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் சமன் செய்ய எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட வேண்டும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எதிர்காலம், அமெரிக்க எண்ணெய் அளவுகோல், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பீப்பாய்க்கு 130.50 டாலராக ஆக உயர்ந்தது.  கடந்த 2008  ஜூலைக்குப் பிறகு, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவுகோலான பிரென்ட் கச்சா, ஒரே இரவில் ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 139.13 டாலரை எட்டியது. இது  கடந்ந்த 2008 ஜூலைக்குப் பிறகு இதுவும் அதிகபட்சமாக இருந்தது.

Petrol, Diesel Price : சென்னையில் 9வது நாளாக மாற்றமின்றி விற்கப்படும் பெட்ரோல், டீசல்...!

கடந்த திங்கள் கிழமை ஒரு டாலருக்கு 77.01 என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிந்தது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை பூர்த்தி செய்ய வெளிநாட்டு கொள்முதலை நம்பியுள்ளது. இது ஆசியாவில் அதிக எண்ணெய் விலைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.

எண்ணெய் விலைகள் ஏற்கனவே இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. மேலும் பலவீனமான ரூபாய் மதிப்பு நாட்டின் நிதியைப் பாதிக்கலாம், புதிய பொருளாதார மீட்சியை உயர்த்தலாம் மற்றும் பணவீக்கத்தைத் தூண்டலாம்.

2017 ஆம் ஆண்டு முதல், எரிபொருள் விலைகள்  சர்வதேச விலைக்கு ஏற்ப தினசரி மாற்றியமைக்கப்படும். ஆனால் 2021 நவம்பர் 4 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) தகவல்களின்படி, மார்ச் 1ஆம் தேதி இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 111 டாலருக்கு மேல் உயர்ந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்காத நேரத்தில் இந்திய கச்சா எண்ணெயின் பீப்பாய் விலை சராசரியாக 81.5 டாலராக ஆக இருந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget