மேலும் அறிய

Petrol, Diesel Price Today : தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை..! கதிகலங்கும் மக்கள்..!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் மேலும் உயர்ந்து ரூபாய் 100.75க்கு விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.80க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டில் பல மாநிலங்களில் ரூபாய் 100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், கடந்த 2-ந் தேதி முதன்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 100ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே உள்ளது. நேற்று 19 காசுகள் உயர்ந்து 93.91க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று விலை மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. நேற்று 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.44க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று மேலும் 31 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.75க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி ரூபாய் 98.65க்கு சென்னையில் பெட்ரோல் விற்கப்பட்டது.


Petrol, Diesel Price Today : தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை..! கதிகலங்கும் மக்கள்..!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கலால் வரி என்பது மத்திய மாநில அரசுகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரி. கடந்த ஜனவரி மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 57 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை தற்போது மேலும் குறைந்து 40 டாலராக உள்ளது. ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பலவற்றின் விலை உயரும் அபாயம் உள்ளது.  

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 


Petrol, Diesel Price Today : தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை..! கதிகலங்கும் மக்கள்..!

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிட்டார், தமிழகத்தின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என்றும், எப்போது சரியாகிறதோ அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது போல பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைப்போம் எனவும் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget