மேலும் அறிய

Petrol, Diesel Price: இன்று இந்த விலையா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

Petrol, Diesel Price: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி 79ஆவது நாளாக ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இவ்விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

கிட்டதட்ட 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் கண்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.

Petrol, Diesel Price: இன்று இந்த விலையா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 79ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட்.08) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு நிம்மதியில் உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget