![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol, Diesel Price : சட்டென மாறும் விலைவாசி... பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமா.. இன்றைய விலை நிலவரம்!
Petrol, Diesel Price : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 105வது நாளாக ஒரே விலையில் விற்கப்படுகிறது.
![Petrol, Diesel Price : சட்டென மாறும் விலைவாசி... பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமா.. இன்றைய விலை நிலவரம்! Petrol and diesel price chennai on 3rd september 2022 Petrol, Diesel Price : சட்டென மாறும் விலைவாசி... பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமா.. இன்றைய விலை நிலவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/26/75d1d38d51f69f5f82300d9fdfba70bf1661475916220102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் 105வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( செப்டம்பர் 03) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது.அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)