மேலும் அறிய

Petrol Diesel Price : முடிந்தது தீபாவளி.. மாறியதா பெட்ரோல் விலை..? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 157-வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Petrol, Diesel Price :  தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 157வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 150 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.

இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 157வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


Petrol Diesel Price : முடிந்தது தீபாவளி.. மாறியதா பெட்ரோல் விலை..? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்!

இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025 ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது! 2 நாட்களில் ரூ.3,720 சரிவு!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தங்கம் விலை தாறுமாறாக குறைந்தது! 2 நாட்களில் ரூ.3,720 சரிவு!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Embed widget