Couples Managing Finance : காதலர்களிடம் சொல்லப்படும் 5 பொய்கள்! பண விஷயத்தை கையாள சூப்பர் டிப்ஸ்..
தனி நபர் பொருளாதாரம் தொடர்பாக தம்பதிகளிடையே பல்வேறு பொய்யான தகவல்களும் பரவியுள்ளன. அவற்றில் மிக முக்கியமான 5 பொய்களை இங்கே பட்டியலிட்டு, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கூறியுள்ளோம்...
பெரும்பாலான தம்பதிகள் தங்கள் பொருளாதாரம் குறித்து பேசுவதையும், அதன்மீதான முடிவுகளை எடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர். மேலும், தனி நபர் பொருளாதாரம் தொடர்பாக தம்பதிகளிடையே பல்வேறு பொய்யான தகவல்களும் பரவியுள்ளன. அவற்றில் மிக முக்கியமான 5 பொய்களை இங்கே பட்டியலிட்டு, அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கூறியுள்ளோம்...
1. திருமணத்திற்கு முன்பு பணம் குறித்து பேசுவது சரியல்ல.
தம்பதிகள் திருமணத்திற்காக நிச்சயம் செய்தவுடன் தங்கள் இருவரின் வாழ்க்கையைப் பகிர்வது குறித்து பேசுவது மட்டுமின்றி, நிதி அடிப்படையில் எப்படி நிம்மதியாக வாழ்வது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு தம்பதியின் வாழ்க்கையிலும் பல்வேறு கால கட்டங்களில் பணம் குறித்து உரையாடும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், திருமணத்திற்குப் பிறகு, நிலம், வீடு முதலானவற்றில் பணம் முதலீடு செய்வது குறித்தும் பேசப்பட வேண்டும்.
பொருளாதார விவகாரங்களைப் பேசுவதால் அவை மோதலில் முடியலாம் எனத் தம்பதிகள் கருதலாம். எனினும், அது தன் இணையிடம் உண்மையாக இருப்பதில் இருந்து விலக்குவதால், என்றாவது ஒரு நாள் ஏற்படும் பொருளாதாரம் தொடர்பான மோதல், திருமண வாழ்க்கைக்கே எதிரானதாக அமையலாம். எனவே பணம் குறித்து உங்கள் இணையுடன் உரையாடுங்கள்.
2. காதல் அனைத்தையும் வெல்லும்.
நாம் ஒருவரை ஆத்மார்த்தமாக காதலித்தால், அது அனைத்தையும் வெல்லும் என நம்பப்படுகிறது. ஆனால் நம்மால் ஒருவரை ஆழமாக காதலித்துக் கொண்டே, நிதி விவகாரங்களில் தனியாக முடிவுகளை எடுக்க முடியும். அது தவறானதாகக் கருதப்பட்டாலும், பிற்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தவிர்க்க உதவும். முதிர்ச்சியுள்ள காதலில் தம்பதிகள் இருவரும் தங்கள் நிதி விவகாரங்களைப் பகிர்வது, அது குறித்து பேசுவது, அதன் மீதான மேலாண்மையை மேற்கொள்வது ஆகியவற்றை இணைந்து செய்ய வேண்டும்.
3. காதலிப்பவரிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது
பிரச்னைகளின் போது `என்னை மன்னித்துவிடு’ எனக் கூறுவது, அந்தப் பிரச்னையில் இருந்து மன்னிப்பைக் கோருவதும், அதில் இருந்து நகர்வதற்கும் பெரிதும் பயன்படும். பணம் தொடர்பான பிரச்னைகளின் போது, உங்கள் இணையைப் புரிந்துகொள்வது, அது குறித்து உரையாடுவது, தவறு இருப்பின் மன்னிப்பு கோருவது முதலானவை உறவைப் பலப்படுத்தும்.
4. மகிழ்ச்சியான தம்பதியினர் பணம் குறித்து திறந்த மனதோடு இருக்கிறார்கள்
பெரும்பாலான தம்பதிகளுள் தாங்கள் மேற்கொள்ளும் செலவுகளைத் தங்கள் இணையிடம் மறைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். பெண்கள் தங்கள் உடைகள், அழகுப் பொருள்கள் முதலானவற்றை மறைப்பதோடு, ஆண்கள் கேளிக்கைப் பொருள்கள், மது முதலானவற்றை வாங்கியதை மறைக்கிறார்கள். இது உறவுகளைப் பலவீனப்படுத்தும் விவகாரங்கள்.
5. பணம் விவகாரங்களில் தம்பதியினர் எப்போது ஒத்துப்போக வேண்டும்
முதலில் இவ்வாறு நிகழ்வது இல்லை. மேலும் பணம் குறித்து வெவ்வேறு கோணங்கள் இருப்பதில் பல்வேறு லாபங்கள் உண்டு. இருவரும் தங்களிடம் இருக்கும் மாற்றுப் பார்வைகளை மதிப்பதோடு, ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்றுக் கொண்டு, அதன் பலம், பலவீனங்களை உணர்ந்து, அதன் நடுப்புறத்தில் இருந்து முடிவுகளை மேற்கொள்வது சிக்கல்களைத் தடுக்கும்.