வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்மை பயன்படுத்தி மாதம் ஐந்து முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்யலாம்.
அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது. வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
New Year Memes: “இப்பதான ஆரம்பிச்சிருக்கு, இன்னும் அடிக்கவே இல்லையே” - கல கல புத்தாண்டு மீம்ஸ்
அதன்படி, இதுவரை 20 ரூபாயாக பிடிக்கப்பட்டிருந்த கட்டணமானது இன்றிலிருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் ஏடிஎம் பராமரிப்பு, பாதுகாப்பு செலவினங்களுக்காக நிதி தேவை அதிகரித்துள்ளது.
எனவே அதை கருத்தில் கொண்டு இந்தக் கட்டணமானது அதிகரிக்கப்படுவதாகவும், இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ரிசர்வ வங்கி இவ்வாறு அறிவித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் முகேஷ்: அம்பானி சாம்ராஜ்யத்தின் அடுத்த சிம்மாசனம் யார்?
Year Ender 2021: 2021-ம் ஆண்டு ரிவைண்ட்... ஸ்டார்ட் அப்களில் 36 பில்லியன் டாலர் முதலீடு