புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை அனுமதியுடன் புதுச்சேரி பழைய துறைமுக திடலில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனிடையே இது தொடர்பான வழக்கு ஒன்றில் பிரபலங்களை கொண்டு பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


தமிழகம் மீனவர்கள் மீது கிருமி நாசினி ஊற்றி இருப்பது மனிதாபிமானம் இல்லாத செயல் - மதுரை உயர்நீதிமன்றம்



சிறுமியை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை - போலி சாமியார் உட்பட 3 பேர் கைது


இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சன்னிலியோனை அழைத்து வந்து நடனம் நடத்தவுள்ளதாக கூறி இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத்துறையை கண்டித்து நடன நிகழ்ச்சி நடத்தும் இடமான பழைய துறைமுக வாயில் முன்பு தமிழர்களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்த முயன்ற போது தடுப்புகளை மீறி சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்த முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கு இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடத்தும் இடத்திற்கு தடுப்புகளை மீறி சென்றவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த போனர்களையும் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


பொங்கலுக்கு தயாராகும் பித்தளை பாத்திரங்கள் - பொதுமுடக்க அச்சத்தால் பட்டறை உரிமையாளர்கள் கலக்கம்





பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தார்கள். பிரபல நடிகைகள் பொது இடத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறியும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடனம் நடைபெற்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பாரதியும், பாரதிதாசனும் வாழ்ந்த மண்ணில் ஆபாச நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


Kola pasi Series-9 | கரூர்: கொல்லி மலை தேன் முதல் நாடோடித்தென்றல் வாத்து வரை