வருமான வரி தாக்கல் செய்ய வருடந்தோறும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதிய வருமானவரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 என இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யும்போது, அதை E Verify செய்வது அவசியமாகும். ஆதார் OTPஐப் பயன்படுத்தி வருமானவரி தாக்கலை சரிபார்ப்பது எளிதான வழிகளில் ஒன்றாகும்.
அதற்கான வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ e filing போர்ட்டலைப் பார்வையிடும்போது, விரைவு இணைப்புகளின் கீழ் (பக்கத்தின் இடது புறம்) e-சரிபார்ப்பை கிளிக் செய்ய வேண்டும்
- அடுத்ததாக ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTPஐப் பயன்படுத்தி நான் சரிபார்க்க விரும்புகிறேன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- OTP சரிபார்க்கப்பட்ட பின்னர் எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு எனது ஆதார் விவரங்களை சரிபார்க்க நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின்னர் Generate Aadhaar OTP விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அதனைத் தொடர்ந்து மொபை எண்ணுக்கு வந்த OTPஐ பதிவிட வேண்டும்.
- மொபைல் எண்ணுக்கு வரும் OTPயானது 15 நிமிடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதேபோல், OTPயை சரியான முறையில் உள்ளிட 3 வாய்ப்புகள் மட்டுமே பயனருக்கு கிடைக்கும்.
- OTPஐ சரியாக பதிவிட்டவுடன் பரிவர்த்தனை ஐடி உங்களுக்கு அனுப்பப்படும், அதைச் சரியாகச் சேமித்துவைக்கவும்.
அதற்கான உறுதிப்படுத்தல் செய்தியைப் பெற உங்கள் மின்னஞ்சலையும் பதிவுசெய்த தொலைபேசி எண்ணையும் சரி பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் முகேஷ்: அம்பானி சாம்ராஜ்யத்தின் அடுத்த சிம்மாசனம் யார்?