ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கத்ரா காஷ்மீர் வைஷ்ணோதேவி கோயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பக்தர்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 க்கு அதிகமானோர் படுகாயமும் அடைந்துள்ளனர். 


 






காஷ்மீர் வைஷ்ணோதேவி கோயிலில் கூட்டநெரிசல் காரணமாக உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


 






கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 20 க்கு அதிகமான பக்தர்களை நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மருத்துவமனை நிர்வாகி கோபால் தத் தெரிவித்தார். "பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.


இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவிக்கையில், கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி பவனில் பக்தர்கள் சாமியை தரிசிக்க வரிசையில் சென்றபோது, ஒருவருக்கு ஒருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் தள்ளு முள்ளுவாக மாறி அதைத் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் அதிகாலை 2.45 மணியளவில் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண