நடப்பு ஆண்டு முடிந்து புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் 31-க்குள் மறக்காமல் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் 4 இருக்கின்றன. நடப்பு காலாண்டர் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜனவரி 1ல் இருந்து பல நிதி ரீதியிலான மாற்றங்கள் வரவுள்ளன. ஆக இதனை செய்யாமல் தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடலாம். பணம் மட்டும் அல்ல, இதனால் மீண்டும் உங்களது கடமைகளை செய்ய கூடுதலாக நேரம் செலவழிக்க நேரலாம். ஆக சரியான நேரத்தில் இந்த 4 விஷயங்களையும் முடிக்க கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். காலக்கெடுவிற்கு முன் இந்த பணிகளை நீங்கள் செய்து முடிக்கவில்லை என்றால், நீங்கள் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return File) செய்வதற்கான கடைசி தேதி 31 டிசம்பர் 2021 ஆகும். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், பல வரி செலுத்துவோர் காலக்கெடு முடிந்த பிறகும் அபராதம் எதுவும் செலுத்தாமல் தங்கள் ITR ஐ தாக்கல் செய்யலாம். 2020-21 நிதியாண்டிற்கான ITR ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT டிசம்பர் 31, 2021 வரை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆதார் UAN இணைப்பு, PF நாமினி அப்டேட் செய்தல், ஜீவன் பிரமாண் பத்திரம் வழங்குதல், ஆகியவற்றிற்கும் கூட கடைசி தேதி டிசம்பர் 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் நீங்கள் செய்யாமல் விட்டிருந்தால் உடனடியாக செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.






ITR தாக்கல் கடைசி தேதி


இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால், மத்திய அரசு 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு, வருமான வரி தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் என பல காரணிகளினால் இது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தான் இதற்கான கால அவகாசத்தினை டிசம்பர் 31 வரையில் அரசு நீட்டித்தது. இதை நீங்கள் ஆன்லைனிலேயே செய்யலாம், முதலில் incometax.gov.in என்ற இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்



  1. பின்னர் Login பட்டனை கிளிக் செய்யவும்.

  2. இப்போது உங்கள் பயனர்பெயரை உள்ளிட்டு continue பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  3. பின்னர் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

  4. இப்போது e-file டேப்பில் கிளிக் செய்து, File Income Tax Return ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  5. 2021-22 மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து, continue என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

  6. பின்னர் 'ஆன்லைன்' அல்லது 'ஆஃப்லைன்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவீர்கள்.

  7. ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.

  8. இப்போது 'பர்சனல்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  9. அடுத்தது continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.

  10. ITR-1 அல்லது ITR-4, இரண்டிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  continue என்ற டேபைக் கிளிக் செய்யவும்.

  11. விலக்கு வரம்பின் மேல் அல்லது  பிரிவு 139(1) இன் கீழ் 7வது விதியின் கீழ் Return-க்கான காரணம் கேட்கப்படும். 

  12. ஐடிஆர் ஆன்லைனில் தாக்கல் செய்யும் போது சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  13. உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிடவும்.

  14. இப்போது ஐடிஆர் தாக்கல் செய்ய புதிய பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள். 

  15. உங்கள் ஐடிஆரைச் சரிபார்த்து, வருமான வரித் துறைக்கு ஒரு பிரதியை அனுப்பவும்.



ஆதார் + UAN இணைப்பு


ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சம்பளம் பெறும் நபர்களின் ஆதார் எண்ணை அவர்களின் ஈபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை முன்னதாக நீட்டித்துள்ளது. இது குறித்து பல முறை எச்சரித்தும் உள்ளது. இந்த் நிலையில் கடைசியாக டிசம்பர் 31, 2021 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னர் பிஎஃப் தொகை எடுக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய பரிவர்த்தனையின்போது பிரச்சனைகள் எழலாம். ஆக மறக்காமல் டிசம்பர் 31-க்குள் இதனை அப்டேட் செய்து விடுங்கள்.


PF நாமினி அப்டேட்


வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினியின் பெயரை அப்டேட் செய்வது. இது குறித்து EPFO ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் கட்டாயம் டிசம்பர்31, 2021-க்குள் நாமினியை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னாளில் உங்களுக்கு இது பிரச்சனைகளாக மாறக்கூடும். உதாரணத்திற்கு இன்சூரன்ஸ், பென்சன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காமல் போகலாம். ஆக டிசம்பர் 31க்குள் கட்டாயம் ஊழியர்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.



ஜீவன் பிரமாண் பத்திரம்


பென்சன் வாங்கிக் கொண்டிருக்கும் நபர்கள் மறக்காமல் டிசம்பர் 31-க்குள் தங்களது ஜீவன் பிரமாண் பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை அவசியம் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்குள் செய்திட வேண்டும். பென்சன் பெற ஓய்வூதியதாரர்கள் இதனை கொடுக்க வேண்டியது மிக அவசியமானதாகிறது. இதனையும் ஆன்லைனிலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது.


Also Read | Gold-Silver Rate, 27 Dec: வாரத்தின் முதல் நாளில் விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய முழு விவரம்