மேலும் அறிய

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் தரும் திட்டம்.. அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் அனைவருக்கும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான ஓய்வூதியத்தை அரசு உறுதிசெய்துள்ளது.

அடல் பென்ஷன் யோஜனா என்று அழைக்கப்படும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சிறிய முதலீடுகள் மேற்கொள்வது ஓய்வூதியத்தை உறுதி செய்வதால் நல்ல திட்டமாகக் கருதப்படுகிறது. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் அனைவருக்கும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான ஓய்வூதியத்தை அரசு உறுதிசெய்துள்ளது. அதே நேரம், அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் இணைந்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 7 ரூபாய் என்ற கணக்கில் முதலீடு மேற்கொண்டால் ஓய்வூதியமாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களால் பெற முடியும். 

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் அனைத்து விதமான மக்களையும் ஓய்வூதியத்தின் கீழ் கொண்டுவருவது ஆகும். ஒரு குறிப்பிட்ட தொகையை இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் சேமித்து வந்தால், உங்கள் ஓய்வுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியமாகப் பெற முடியும். இதன் மூலம் அரசு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் தரும் திட்டம்.. அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

6 மாதங்களுக்கு ஒரு முறை வெறும் 1239 ரூபாய் முதலீடு செய்து 60 வயதைக் கடந்த பிறகு ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வாழ்நாள் முழுவதும் பெறும் திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய விதிமுறைகளின் படி, இந்த ஓய்வூதியத் திட்டத்தில் அதிக பட்சமாக 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யும் 18 வயது நபர், சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 ரூபாய் என்ற கணக்கில், மாதம் தோறும் 210 ரூபாய் தொகையை செலுத்தினால் போதும். இதே தொகையை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் 626 ரூபாய் என்றும், 6 மாதங்களுக்கு ஒருமுறை என்ற விகிதத்தில் 1239 ரூபாய் என்ற அளவிலும் செலுத்தலாம். ஓய்வுக்குப் பிறகு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் தங்கள் 18 வயதிலேயே மாதம் தோறும் 42 ரூபாய் என்ற கணக்கில் தொகை செலுத்தி இந்தத் திட்டத்தில் இணையலாம். 

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் தரும் திட்டம்.. அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

உதாரணமாக, இந்தத் திட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பும் 35 வயதான நபர் இணைகிறார் என்றால் அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை 5323 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் மொத்த முதலீடு 2.66 லட்சம் ரூபாயாக இருக்கும். அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். அதே வேளையில், 18 வயதிலேயே இந்தத் திட்டத்தில் இணைந்தால் உங்கள் மொத்த முதலீடு 1.04 லட்சம் ரூபாயாக இருக்கும்; ஒரே ஓய்வூதியத் திட்டத்தில் 1.60 லட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும். 

தலைப்பு செய்திகள்

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget