search
×

ஆகஸ்ட் முதல், சமையல் எரிவாயு, ஏ.டி.எம், வங்கி விதிகள்.. என்னென்ன மாற்றங்கள் வருது தெரியுமா?

ஏடிஎம் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம், சமையல் எரிவாயு விலை உயர்வு, ஐசிஐசிஐ வங்கியின் பணபரிவர்த்தனை போன்றவற்றில் ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவுள்ளது.

FOLLOW US: 
Share:

 மக்களின் வசதிகளுக்காக பல்வேறு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தியிருந்தன. எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு தேவையான பணத்தை எடுக்க உதவுவது டிஜிட்டல் பரிவர்த்தனை. வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இத்தகைய மாற்றங்கள் எந்தவகையில் ஒரு நபரின் வாழ்க்கையினை பாதிக்கிறது எனவும்? என்னென்ன இதில் இடம் பெற்றுள்ளது என இந்நேரத்தில் கட்டாயமாக நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

அதன்படி முதலில், தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH- National Automated Clearning House). தற்பொழுது தனிநபர் உள்பட அனைத்து நிறுவனங்களும் பணபரிவர்த்தனை ஆன்லைன் மூலம் மேற்கொள்கின்றனர். இதற்கு National Automated Clearning House முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் மூலம் வங்கி விடுமுறை நாட்களில் கூட சம்பளம் உள்பட பிற பணபரிவரத்தனைகளை நாம் மேற்கொள்ளமுடியும். இதன் உதவியோடு எப்பொழுது வேண்டுமானாலும் நம்முடைய பணத்தேவையினை 24* 7 என்ற அடிப்படையில் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கும் பொழுதுதான், இனிவரும் காலங்களில் ஆன்லைனில் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனையை வேலை நாட்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏடிஎம் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்:  இந்திய ரிசர்வ் வங்கி வங்கி நிதி மற்றும் நிதி அல்லாத பரிவரத்தனைகளுக்கான பரிமாற்றக்கட்டணத்திற்கு  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையினை அமல்படுத்துகிறது.  இதன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுப்பது முதல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளான மினி ஸ்டேட்மென்ட் அச்சிடுதல்,  balance enquiry, pin change, காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கும் இனி மேல் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பண பரிவர்த்தனைக்காக வசூலிக்கப்படும் ரூ.15 பரிமாற்றக்கட்டணத்தினை மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் கொடுத்துவரும் நிலையில், இக்கட்டணம் ரூ.17 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.  மேலும் நிதி சாராத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு 5 ரூபாய் கட்டணத்திலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இலவச ஏடிஎம் பரிவர்த்தனையில் மாற்றம்:  ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நடைமுறைகள் தற்பொழுது  மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ மற்றும் மெட்ரோ இல்லாத நகரங்களில் பணம் எடுக்கும் நடைமுறைகளில் மாற்றம் வரவுள்ளது. அதன்படி மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத பிற நகரங்களில் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 5 முறையும் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒருவேளை இலவச பரிவர்த்தனையினைத் தாண்டி  ஏடிஎம் கார்டுளைப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ICICI வங்கியின் புதிய விதிகள்: ஆகஸ்ட் மாதம் முதல் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் மாதத்திற்கு 4 பரிவர்த்தனைகள் வரை மேற்கொள்ள எந்த விதமான கட்டணமும் இல்லை. ஒருவேளை இலவச வரம்புக்கு மேல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் மூலம் தரப்படும் 25 காசோலைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும், இதற்கு மேல் பெறவேண்டும் என்றால் 10 காசோலைகளுக்கு ரூ. 20 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Form 15CA/15CB தாக்கல் செய்ய காலக்கெடு: கொரோனா பெருந்தொற்றினால் பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வந்த வேளையில், வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை நீடித்து அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக இதற்கான படிவம் 15 சிஏ / 15 சிபி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பரிவர்த்தனை செய்யப்படும் பணம் தொடர்பான வருமான வரி படிவங்களையும் தாக்கல் செய்ய வருமானவரித்துறை கட்டாயப்படுத்தியுள்ளது.

மேலும் வரும் மாதங்களிலிருந்து எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவதோடு விலை உயரவும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, ஆகஸ்ட் 4 மற்றும் ஆகஸ்ட் 7-இல் கடன் மற்றும் நிலையான வைப்பு விகிதங்களில் மாற்றம் ஏற்படவுள்ளது.

Published at : 29 Jul 2021 02:00 PM (IST) Tags: india central govt Personal finance invidual life atm transaction

தொடர்புடைய செய்திகள்

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

டாப் நியூஸ்

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து