மேலும் அறிய

India Post: கூரியரை விட வேகம்.. இனி 24 மணி நேரத்திற்குள் டெலிவரி.. வேகமெடுக்கும் தபால் சேவை!

India Post 24 Hours Delivery: விரைவுத் தபால் சேவை 3 முதல் 5 நாட்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில் இனி 24 மணி நேரம், 48 மணி நேரத்திற்குள் சேவை என்ற திட்டம் அறிமுகமாகியுள்ளது.

தனியார் கூரியர் சேவைகளுக்கு போட்டியளிக்கும் வண்ணம் இந்திய தபால் துறையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஸ்பீட் போஸ்ட் சேவை விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்திய தபால் துறை சேவைகள்

தொலைத்தொடர்பு சாதனங்களில் அஞ்சல் சேவையின் பங்கு மிக முக்கியமானது. முந்தைய காலக்கட்டங்களில் மத்திய அரசு நாடு முழுவதும் நகரம் முதல் கிராமம் வரை அஞ்சல் சேவை கிடைக்கும் பொருட்டு அந்த துறை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய தபால் துறை மூலம் கடிதங்கள், பார்சல்கள், விரைவுத் தபால் (ஸ்பீட் போஸ்ட்), பணப் பரிமாற்றம், சிறு சேமிப்புத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் சுமார் 1.6 லட்சத்திற்கு அதிகமான அஞ்சல் நிலையங்கள் இயங்குகிறது.

ஸ்பீட் போஸ்ட் சேவை

இதில் விரைவுத் தபால் சேவை என்பது தனியார் கூரியர் சேவைக்கு நிகராக கடிதம், ஆவணம், பொருட்களை மிக விரைவாக நாட்டின் எந்தவொரு மூலையில் இருந்தும் அனுப்ப முடியும். இதில் அதிகப்பட்சம் 35 கிலோ வரையிலான பொருட்களை அனுப்பலாம். தூரம் மற்றும் எடையைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலையில் அனுப்பும் தபால்களை நாம் இணையதளம் வாயிலாக கண்காணிக்க முடியும். அரசு துறைகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனம், பொதுமக்களும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிரடி மாற்றம் பெறும் விரைவு தபால் சேவை

இதனிடையே தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் ஸ்பீட் போஸ்ட் சேவையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. புதிய நடவடிக்கை மூலம் இனிமேல் பிரீமியம் '24 ஸ்பீடு போஸ்ட்' மற்றும் '48 ஸ்பீடு போஸ்ட்' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பார்சலும் அனுப்பலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் மார்ச் 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இந்த புதிய பிரீமியம் சேவைகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பெருநகரங்களில் மட்டும் முதற்கட்டமாக செயல்படும் என்றும், மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 24 ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் 24 மணி நேரத்தில் உங்களுடைய தபால் டெலிவரி செய்யப்படும். இதை 48 மணி நேர சேவையிலும் நாம் பயன்படுத்தலாம். 

இந்த புது திட்டத்தின் கீழ் பார்சல்கள் அனைத்தும் விமானம் மூலம் அனுப்பப்படும். இதன்மூலம் கூரியரை விட வேகமான டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்சல் சேவையில் 5 கிலோ வரை அடிப்படை எடைக்கான கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், அதற்கு மேல் மொத்த எடை மற்றும் தூரம் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஸ்பீடு போஸ்ட் சேவையில் பதிவு செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். உள்ளூர் மற்றும் 50 கிராம் வரையிலான பொருட்களுக்கு ரூ.15ம், நீண்ட தூரம் மற்றும் 50 கிராமுக்குட்பட்ட பொருட்களுக்கு ரூ.35ம், 500 கிராம் வரையிலான கனமான பொருட்களுக்கு ரூ.90 வரை தோராயமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும் ஜிஎஸ்டி தனியாக வசூலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி செய்யும்போது ஓடிபி அடிப்படையில் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்பீட் போஸ்ட் சேவை 3 முதல் 5 நாட்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Embed widget