மேலும் அறிய

GST Council: முக்கிய பொருட்களின் வரி விகிதம் மாற்றமா?- ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்ற மறைமுக வரியை கொண்டு வந்தது. பெட்ரோல்,டீசல், மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்கள் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஜிஎஸ்ட் வரி விதிப்பு தொடர்பாக முடிவு செய்ய மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சில் அடிக்கடி கூடி வரி விதிப்பு தொடர்பான முடிவுகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது உள்ள குறைந்த வரி சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி வரி 4 விகிதங்களில் உள்ளது. 5%,12%,18% மற்றும் 28%ஆகிய 4 விகிதங்களில் ஜிஎஸ்டி வரி உள்ளது. 

இந்த வரி விகிதத்தில் தற்போது 5% என்ற குறைவான அளவை 7% அல்லது 8% விகிதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை மட்டும் 3% சதவிகிதத்தில் மாற்றிவிட்டு மற்ற பொருட்களான வரியை 5% சதவிகிதத்திலிருந்து அதிகரிக்க கவுன்சில் முடிவு எடுக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கு 3% ஜிஎஸ்டி வரி உள்ளது. 


GST Council: முக்கிய பொருட்களின் வரி விகிதம் மாற்றமா?- ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

ஆகவே 5% வரி விகிதத்தில் உள்ள பொருட்களுக்கான வரியை ஒரு சதவிகிதம் அதிகருக்கும் பட்சத்தில் ஆண்டு தோறும் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிக வருமானம் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் குறைவிற்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இழப்பீடு வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆகவே மாநிலங்கள் தங்களுடைய வருவாய் பெருக்க அதிகளவில் நிதி ஜிஎஸ்டி வரி மூல வர வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கின்றனர். 

 

இந்த இழப்பீடு முடிவிற்கு பிறகு என்ன செய்வது என்பதை ஆராய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு அடுத்த மாதம் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதன்பின்னர் ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி விகித மாற்றம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Embed widget