மேலும் அறிய

G Pay Pocket Money: ஜிபேயில் பாக்கெட் மணி அம்சம் அறிமுகம்; டிஜிட்டல் பர்ஸ், பெற்றோருக்கு பெஸ்ட்- எப்படி?

பெற்றோர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாகவே, தங்கள் பிள்ளைகளுக்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்கலாம். இதற்காக சிறுவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு எதுவும் தேவையில்லை.

Gpay-ன் புதிய அம்சமாக Pocket money அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது UPI CIRCLE-ன் ஐகான் ஆகும். UPI Circle என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பணம் செலவு செய்ய நீங்கள் தரும் ஒரு டிஜிட்டல் அனுமதி ஆகும். இதில் உங்களின் நேசத்துக்கு உரியவர்களுக்கும் பணம் அனுப்பலாம்.

பெற்றோர்களுக்கு பலன்

பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி அல்லது வாராந்திர செலவுகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பது எல்லா வீடுகளிலும் வழக்கமான ஒன்றுதான். முன்பு நூறு, ஐம்பது என ரூபாய் நோட்டுகளாக கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால், டீக்கடை முதல் தியேட்டர் வரை எங்கும் க்யூஆர் கோடு வந்துவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில், டீனேஜ் சிறுவர்களுக்கும் யுபிஐ வசதி அவசியம் ஆகிவிட்டது.

இதைக் கருத்தில் கொண்டு கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பான வசதிதான் இந்த சிறுவர்களுக்கான டிஜிட்டல் பாக்கெட் மணி. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இது என்ன வசதி?

பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சுயமாக வங்கிக் கணக்கு தொடங்கி, யுபிஐ ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்பவே, பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் பிள்ளைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்படிச் செயல்படுகிறது?

இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் கட்டுப்பாட' முழுவதும் பெற்றோர்கள் கையில் இருப்பதுதான்.
பெற்றோர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாகவே, தங்கள் பிள்ளைகளுக்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்கலாம். இதற்காக சிறுவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு எதுவும் தேவையில்லை. பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்தே சிறுவர்களின் ஜிபே கணக்கிற்கு பாக்கெட் மணியை அனுப்ப முடியும்.

பெற்றோர்களுக்கு இதில் உள்ள நிம்மதி என்ன?

கையில் பணமாக கொடுக்கும்போது, பிள்ளைகள் அதை எதற்கு செலவு செய்தார்கள் என்பது பல நேரங்களில் பெற்றோருக்குத் தெரியாது. ஆனால், இந்த டிஜிட்டல் பாக்கெட் மணி முறையில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

  • செலவு வரம்பு: குழந்தைகள் ஒரு நாளைக்கு அல்லது ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என பெற்றோர்களே ஒரு வரம்பை செட் செய்ய முடியும்.
  • கண்காணிப்பு: உங்கள் பிள்ளை எந்த கடையில், எதற்காக, எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்ற மெசேஜ் உடனுக்குடன் பெற்றோரின் மொபைலுக்கு வந்துவிடும்.
  • பாதுகாப்பு: தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடந்தால், உடனடியாக பெற்றோர்கள் தங்கள் மொபைல் மூலமாகவே பிள்ளைகளின் கணக்கை முடக்கிவிட முடியும்.

என்ன பயன்?

பிள்ளைகள் பணத்தை எங்கே தொலைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி பெற்றோருக்குத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சிறு வயதிலேயே பணத்தை எப்படி திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், பிள்ளைகளுக்குப் போதுமான டிஜிட்டல் சுதந்திரத்தைக் கொடுக்கும் அதே வேளையில், அவர்கள் தவறான வழியில் செலவு செய்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோரின் கையில் லகானைக் கொடுக்கிறது இந்த ஜிபே பாக்கெட் மணி வசதி.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
Embed widget