மேலும் அறிய

Gold, Silver Price Today : ஹேப்பி நியூஸ் மக்களே...இன்று குறைந்த தங்கம், வெள்ளி விலை...இன்றைய நிலவரத்தை தெரிஞ்சிக்கோங்க!

Gold, Silver Price Today :சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 40,120 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூபாய் 25 குறைந்து ரூ.5,015 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,336 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,417 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை  ரூ.74 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.74,000ஆக விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,320 ஆகவும்  தங்கம் கிராமுக்கு  ரூ.5,040 ஆகவும் விற்பனையானது.

தங்க ஆபரணங்கள்:

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.

அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.

தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

தங்க சேமிப்பு திட்டங்கள் : 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம். 

தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 
தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget