மேலும் அறிய

Gold Price Today: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கியது!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 960 அதிகரித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்த பிறகும், கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரன் தங்கம் ரூபாய் 960 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூபாய் 54 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 825க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை:

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 705க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கிராமிற்கு ரூபாய் 120 உயர்ந்து இன்று கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 825க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உயர்ந்துள்ளது. வழக்கமாக பைசா கணக்கில் உயர்ந்து வந்த வெள்ளி இன்று ரூபாய் அளவில் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 95க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 95 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் இன்று கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 820க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 58 ஆயிரத்து 240க்கு விற்கப்படுகிறது.

சாமானியர்கள் வேதனை:

தங்கம் நகையாக இருந்தாலும் பொதுமக்களின் அவசரத் தேவைக்கான பொருளாக தங்கமே உள்ளது. பெரும்பாலும் சாதாரண மக்களின் முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. அவசர காலத்தில் பொதுமக்கள் தங்களின் பணத்தேவைக்கு தங்கத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில், தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்திலே இருந்து வருகிறது. மத்திய அரசு நடப்பாண்டில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாக குறைத்தது. 

இதையடுத்து, ஓரிரு நாட்கள் மட்டும் தங்கம் விலை இறங்கு முகத்தில் சென்றது. அதன்பின்பு, தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் தங்கம் விலை 55 ஆயிரத்தை ஒரு சவரனுக்கு நெருங்கியிருப்பது சாமானியர்களுக்கு தங்கத்தை எட்டாக்கனியாக மாற்றியுள்ளது. இதனால், தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Embed widget