மேலும் அறிய

Gold, Silver Price: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... தொடர்ந்து ஏறுமுகம்!

Gold, Silver Price : சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 814க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் நேற்று கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 787 க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 512க்கு விற்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று சவரன் தங்கம் கிராமிற்கு ரூபாய் 27 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 814க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 216 அதிகரித்து ரூபாய் 38 ஆயிரத்து 512க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 213க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 704க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூபாய் 80 காசுகள் அதிகரித்து ரூபாய் 72.90க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 72 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது.

Gold, Silver Price: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... தொடர்ந்து ஏறுமுகம்!

பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது கடுமையாக உயர்ந்துள்ளது.  தற்போதுவரை, உக்ரைனில் போர் குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடுமையான ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் ஆகியவை பங்குச் சந்தையை கடுமையாக பாதிக்கிறது. எண்ணெய் விலை 14-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.7% அதிகரித்து 26.09  டாலராகவும், பிளாட்டினம் 2.3% உயர்ந்து 1,147.19 டாலராகவும் இருந்தது.
 
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடையும்வரை போரைக் கைவிடும் திட்டம் இல்லை என்பதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முடிவாக இருக்கிறது.

இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் எண பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் உயர்வு விலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget