மேலும் அறிய

Gold Silver Price Today: குறைந்தது தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்றம்  கண்டு வந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 216 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.27 குறைந்து ரூ.4,625க்கும், சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.37,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,984க்கும், சவரன் ரூ.39,872க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4652, சவரன் - ரூ.37,216

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.5011, சவரன் - ரூ.40,088

ஒரு கிராம் வெள்ளி - ரூ.77.10

ஒரு கிலோ வெள்ளி - ரூ.77,100 



Gold Silver Price Today: குறைந்தது தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.


மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.


மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
Jio IPO Anchor Book: ஜியோ ஐபிஓ ஆங்கர் புக் சாதனை! 30 மடங்குக்கும் மேல் குவிந்த ஏலங்கள்! ரூ.2.5 லட்சம் கோடியைத் தாண்டியது!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
JIO IPO: 2ஜி முதல் ஏஐ வரை.. ஐபிஓ பங்குகள் விற்பனை.. மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் ஜியோ!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Jio Platforms: பட்டியலிடும் முன்னே.. ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-விற்கு குவியும் முதலீடுகள்! 2.5 லட்சம் கோடி இப்பவே வந்துடுச்சு!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget