மேலும் அறிய

Gold Silver Price Today: அதிகரித்தது தங்கம், வெள்ளி விலை

சென்னையில் தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,590க்கும், சவரனுக்கு ரூ.16 அதிகரித்து  ரூ.36,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,949க்கும், சவரன் ரூ.39,952க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி  ரூ.75,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

 

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4588, சவரன் - ரூ.36,704

 

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4947, சவரன் - ரூ.39,576

 

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.30

 

ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,300 


Gold Silver Price Today: அதிகரித்தது தங்கம், வெள்ளி விலை

 

 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார். மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

 

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Embed widget