மேலும் அறிய

Gold Silver Price Today: தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை உயர்வு

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,630க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.37,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,989க்கும், சவரன் ரூ.39,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து கிராம் ரூ.76.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.76,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4620, சவரன் - ரூ.36,960

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4979, சவரன் - ரூ.39,832

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.00

ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,000 

Gold Silver Price Today: தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

90's கிட்ஸ்களை கிறங்கடித்த மோகினியின் டாப் 5 பாடல்கள்!

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

மனநலம் பாதித்த பெண் வன்கொடுமை; குற்றவாளிக்கு சாதகமாக கட்டப்பஞ்சாயத்து!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Cyber Crime: அடப்பாவிகளா? புத்தாண்டு வாழ்த்திலும் மோசடியா? சைபர் காவல்துறை எச்சரிக்கை
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
Embed widget