மேலும் அறிய

Gold Silver Price Today: மாதத்தின் முதல் நாளிலும் தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாதத்தின் முதல் நாளான இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,628க்கும், சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.37,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,996க்கும், சவரன் ரூ.39,968க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராம் ரூ.77.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் அதிகரித்து ரூ.77,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4628, சவரன் - ரூ.37,024

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4,987, சவரன் - ரூ.39,896

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.80

senஒரு கிலோ வெள்ளி - ரூ.76,800 


Gold Silver Price Today: மாதத்தின் முதல் நாளிலும் தங்கம் விலை உயர்ந்தது


தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை!

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும்” என்றார்.

 

 

 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
Embed widget