மேலும் அறிய

Gold Silver Price Today: ‛அண்டாகாகசம்... திறந்திடு சீசேம்...’ குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 36 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 கேரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 501க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 61 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 440க்கு விற்கப்படுகிறது. அதேபோல, சென்னையில் நேற்று சவரன் தங்கம் ரூபாய்  36 ஆயிரத்து 8க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூபாய் 488 குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 804க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 432க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூபாய் 1.50  குறைந்து ரூபாய் 70.20க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 71 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.


Gold Silver Price Today: ‛அண்டாகாகசம்... திறந்திடு சீசேம்...’ குறைந்தது தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

Abhijit Banerjee on GDP: ’எழுதிக்கூடத் தருகிறேன்... 7 சதவிகிதம் வரை குறையும்!’ - ஜி.டி.பி., குறித்து அபிஜித் பனர்ஜி கணிப்பு!

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?
கோயம்பேடு மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கோயம்பேடு மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget