மேலும் அறிய

Gold Rate | சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை...!

சென்னையில் தங்கம் மற்றும் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 541க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராம் ரூபாய் 21 உயர்ந்து ரூபாய் 4 ஆயிரத்து 541-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 328க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ரூபாய் 168 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 496க்கு விற்கப்படுகிறது. இதேபோல, 24 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 926க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூபாய் 39 ஆயிரத்து 408க்கு விற்கப்படுகிறது. அதேபோல, வெள்ளி கிராமிற்கு ரூபாய் 73.20க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 73 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.  


Gold Rate | சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை...!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.
 
Gold Rate | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்வு..! இன்றைய நிலவரம் என்ன?

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்" என்றார்.

தலைப்பு செய்திகள்

எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை.! சவரனுக்கு எவ்வளவு .? இன்றைய நிலவரம் இதோ...
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
JanaNayagan Censor: மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
Embed widget