Gold, Silver Price : முடிந்த அக்ஷய திருதி! குறைந்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
அக்ஷய திருதியை முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் கடந்த மே 2-ஆம் தேதி அக்ஷய திருதியை முன்னிட்டு சுமார் 35 ஆயிரம் நகைக்கடைகளில் கடந்த சில நாட்களாக தங்கம் விற்பனை வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டும் ஒருநாளில் சுமார் 18 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், அக்ஷய திருதியை முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது. நேற்று ஒரேநாளில் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு 80ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 38,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ரூபாய் 5 ஆயிரத்து 240 க்கு கிராம் விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 920 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ரூபாய் 66.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 66 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை உயர காரணம் என்ன..?
ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஜூன் மாதத்திற்கான சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வரவிருக்கும் கூட்டங்களில் 75-அடிப்படை புள்ளி விகித உயர்வை நிராகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்தது. பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால் தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets