மேலும் அறிய

Petrol, Diesel Price : இன்றுடன் 90வது நாள்! விலை குறையாத பெட்ரோல், டீசல்! இன்றைய நிலவரம்!

Petrol, Diesel Price : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 90வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சென்னையில் 90வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


Petrol, Diesel Price :  இன்றுடன் 90வது நாள்! விலை குறையாத பெட்ரோல், டீசல்! இன்றைய நிலவரம்!

இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 90வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.

தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Petrol, Diesel Price :  இன்றுடன் 90வது நாள்! விலை குறையாத பெட்ரோல், டீசல்! இன்றைய நிலவரம்!

கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
MI vs GT Eliminator: 229 ரன்கள் எடுத்தால் உள்ளே.. இல்லாட்டி வெளியே! மும்பைக்கு அடிபணியுமா குஜராத்?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Sai Abhyankkar: நான் நல்ல பையன் மாதிரி நடிப்பேன்.. நல்லா நடிக்கமாட்டேன்.. இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கலகல
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Impact Makers Conclave LIVE: சாதி என்பது அசிங்கம் - அமைச்சர் மனோதங்கராஜ்
Thangam Tennarasu on Election: “எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
“எட்ட முடியாத இலக்கு அல்ல“ 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
TVK Vijay: ”வண்டி வண்டிய கொண்டு வந்து கொட்ட போறாங்க..” தவெக தலைவர் விஜய் சொன்னது என்ன?
Embed widget