மேலும் அறிய

Union Budget 2022 | வகுப்புக்கு 1 சேனல்; மாநில மொழிகளிலேயே கற்பிக்க 200 சேனல்கள்- நிதியமைச்சர் அறிவிப்பு

1 முதல் 12ஆம் வகுப்பு கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு பிரதமர் இ-வித்யா (PM E-Vidhya) திட்டம் மூலம் 200 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.

1 முதல் 12ஆம் வகுப்பு கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு பிரதமர் இ-வித்யா (PM E-Vidhya) திட்டம் மூலம் 200 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8- 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து இன்று (பிப்.1) மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அதில், 1 முதல் 12ஆம் வகுப்பு கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு பிரதமர் இ-வித்யா (PM E-Vidhya) திட்டம் மூலம் 200 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியை அறிமுகம் செய்தன. ஆன்லைன் கல்வியைப் பெறுவதில், விளிம்பு நிலை மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது.

இதனால் மத்திய, மாநில அரசுகள் தொலைக்காட்சி மூலம் கல்வி அளிக்கத் தொடங்கின. டிஜிட்டல் கல்விக்காக பிரதமர் இ-வித்யா திட்டம் தொடங்கப்பட்டு, ஆன்லைன் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பிரதமர் இ-வித்யா டிஜிட்டல் கல்வி திட்டத்தில் அனைத்து வகுப்பினருக்கும் இணையவழி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. க்யூஆர் கோட் மூலம் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்வது அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல ஒரு வகுப்புக்கு, ஒரு தொலைக்காட்சி தளம் என்ற வகையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக  12 சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

Union Budget 2022 | வகுப்புக்கு 1 சேனல்; மாநில மொழிகளிலேயே கற்பிக்க 200 சேனல்கள்- நிதியமைச்சர் அறிவிப்பு

கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல், கல்வித் தொடர்கள், ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடங்களை நடத்தி உரையாட வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்று பல்வேறு வடிவங்களில் தொடர்வதால், ஆன்லைன் கல்வியின் தேவை கருதி, தற்போது 12 சேனல்கள் 200 சேனல்களாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநில மொழிகளிலேயே அனைத்து வகுப்புகளுக்கான பாடங்கள் தனித்தனி சேனல்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget