மேலும் அறிய

சூட்கேஸ் முதல் டிஜிட்டல் டேப்லெட் வரை! இந்திய பட்ஜெட் கடந்து வந்த பாதை.. முக்கிய தகவல்கள்

Union Budget of India: இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்களை கண்டது.

இந்தியாவின் நிதி நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது 'மத்திய பட்ஜெட், ஆகும், இது ஆண்டுத்தோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்தியாவின் முதல் பட்ஜெட் முதல் இன்றைய டிஜிட்டல் பட்ஜெட் வரையிலான முக்கிய தகவல்களை காணாலம்.  

இந்திய பட்ஜெட்டின் வரலாறு: 

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்களை கண்டது. இந்தியாவில் முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இதை வழங்கியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் வில்சன் ஆவார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் மாற்றப்பட்ட பிறகு இந்த முறை அறிமுகமானது.

வில்சன் தான் முதன்முதலில் இந்தியாவில் 'வருமான வரி' (Income Tax) முறையை அறிமுகப்படுத்தினார். இது இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், நவீன நிதி முறைக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது. 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்: 

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டி அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்ஜனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசான பிறகு, பிப்ரவரி 28, 1950 அன்று ஜான் மத்தாய் முதல் குடியரசு தின பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். திட்டக்குழுவின் (Planning Commission) முக்கியத்துவத்தை இந்த பட்ஜெட் வலியுறுத்தியது.

மொழியில் வந்த மாற்றம்: 

ஆரம்பத்தில் பட்ஜெட்டானது ஆங்கிலத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது, 955-56 நிதியாண்டில் இருந்து, அப்போதைய நிதி அமைச்சர் சி.டி. தேஷ்முக் பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் அச்சிடும் முறையைக் கொண்டு வந்தார். 1977 வரை பட்ஜெட் ஆவணங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே அச்சிடப்பட்டன, பின்னர் அது மிண்டோ சாலைக்கு மாற்றப்பட்டது.

நேரம் மாற்றம் தேதியில் நிகழந்த மாற்றங்கள்

1999 ஆம் ஆண்டு வரை லண்டன் நேரத்திற்கு ஏற்ப மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, இதை அப்போதைய நிதியமைச்சர்  யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணி என்று மாற்றி அமைத்தார்.

வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை, 2017 ஆம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு மாற்றினார். இதன் மூலம் புதிய பொருளாதார நிதியாண்டு தொடங்கும் முன்பே (ஏப்ரல் 1) பட்ஜெட்டை வழிவகை செய்யப்பட்டது. அதேப்போல்  92 ஆண்டுகளாகத் தனியாக இருந்த ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

காகிதமில்லா பட்ஜெட்

2021-ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாரம்பரியமான பட்ஜெட் சூட்கேஸிற்குப் பதிலாக, 'பஹி-காதா' (Bahi-Khata) உறையில் வைக்கப்பட்ட டேப்லெட் (Tablet) பயன்படுத்தப்பட்டது.

அதிக பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர்கள்

வரிசை எண் நிதி அமைச்சர் பட்ஜெட்டுகளின் எண்ணிக்கை விவரங்கள்
1 மொரார்ஜி தேசாய் 10 8 முழு பட்ஜெட்டுகள் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகள்.
2 ப. சிதம்பரம் 9 வெவ்வேறு பிரதமர்களின் கீழ் 9 முறை தாக்கல் செய்துள்ளார்.
3 நிர்மலா சீதாராமன் 9 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று தனது 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். (இதுவரை 8 முழு பட்ஜெட் + 1 இடைக்கால பட்ஜெட்).
4 பிரணாப் முகர்ஜி 8 காங்கிரஸ் ஆட்சியின் போது 8 முறை தாக்கல் செய்துள்ளார்.
5 யஷ்வந்த் சின்ஹா 8 வாஜ்பாய் அரசாங்கத்தின் போது 8 முறை தாக்கல் செய்தார்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget