மேலும் அறிய

Bank Holidays August 2023: ஆகஸ்ட் மாசம் வங்கிக்கு போறீங்களா? எத்தனை நாள் லீவ் தெரியுமா? இதோ தெரிஞ்சிட்டு போங்க..!

வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bank Holidays List August 2023: வரும் ஆகஸ்ட் மாத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விவரங்களின் படி, ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 14 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிரது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் விடுமுறை:

ஆகஸ்ட் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும்  டெண்டாங் லோ ஃபாட், பார்சி புத்தாண்டு, ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, முதல் ஓணம், திருவோணம், ரகஷா பந்தன் ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, ஓணம் பண்டிகையையொட்டி ஜூன் 28ஆம் தேதி அன்று,  கேரளா மாநிலத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை தின பட்டியல்:

  • ஆகஸ்ட் 8: டெண்டாங் லோ ரம் ஃபாட் (கேங்டோக்கில் வங்கிக்கு விடுமுறை)
  • ஆகஸ்ட் 12: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 13: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு
  • ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (அகர்தலா, அகமாதாபாத், ஜஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டோரடூன், காங்டாங், கவ்ஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் விடுமுறை)
  • ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை)
  • ஆகஸ்ட் 18: ஸ்ரீமந்த் சங்கரதேவரின் திதி (கௌஹாத்தியில் வங்கிகள் விடுமுறை)
  • ஆகஸ்ட் 20: மூன்றாவது ஞாயிறு
  • ஆகஸ்ட் 26: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 27: மாதத்தின் நான்காவது ஞாயிறு
  • ஆகஸ்ட் 28: முதல் ஓணம் (கேரளாவில் மட்டும் விடுமுறை)
  • ஆகஸ்ட் 29: திருவோணம் (கேரளாவில் மட்டும் விடுமுறை)
  • ஆகஸ்ட் 30: ரகஷா பந்தன் (ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை)
  • ஆகஸ்ட் 31: ரகஷா பந்தன்/ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி (காங்டாக், டேராடூன், கான்பூர், கொச்சி, லக்னோ மற்றும் திருவனந்தபுரம்)

தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 3 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 26ம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்காகவும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 3 நாட்கள் தான் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget