மேலும் அறிய

Apple Pay: ஐபோன் பயனாளர்களுக்கு சூப்பர் செய்தி.. வந்தாச்சு ஆப்பிள் பே.. இனி ஈஸியா பணம் அனுப்பலாம்!

ஆப்பிள் பயனாளர்களுக்கு  மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக இந்தியாவில் ஆப்பிள் பே சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, செப்டம்பர் 30 முதல் உங்கள் ஐபோன், ஐபேட் அல்லது ஆப்பிள் வாட்ச் வழியாக இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் ஆப்பிள் பே சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்த பிறகு இங்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. 

யுபிஐ பணப்பரிவத்தனை 

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ பணபரிவத்தனை என்பது அதிகமாகி விட்டது. இந்தியாவில் கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 314 லட்சம் கோடி அளவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ஓராண்டில் மட்டும் 24,162 கோடி முறை பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வகையில் ஜிபே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மட்டுமின்றி ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய செயலி மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன. 

ஆப்பிள் பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி

இந்த நிலையில் ஆப்பிள் பயனாளர்களுக்கு  மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக இந்தியாவில் ஆப்பிள் பே சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, செப்டம்பர் 30 முதல் உங்கள் ஐபோன், ஐபேட் அல்லது ஆப்பிள் வாட்ச் வழியாக இந்தியாவில் பணம் செலுத்த ஆப்பிள் பே செயலியைப் பயன்படுத்தலாம். ஆனால் தற்போதைக்கு ஆக்சிஸ் வங்கி வழங்கிய விசா அல்லது மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகளவில் பயன்படுத்தும் இந்தியப் பயனர்களுக்கு ஆப்பிள் பே உதவும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தும் போது ஓடிபி அல்லது பின் எண்களை பயன்படுத்த தேவையில்லை. இதன்மூலம் வணிக பயன்பாடுகளுக்கு நேரடியாக பணம் செலுத்துவது முதல் கார்டு மூலமான அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளை ஆப்பிள் பே எளிதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுகிறது என்று ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் வாலட்டின் துணைத் தலைவர் ஜெனிஃபர் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் எதிர்காலத்தில் மற்ற வங்கிகளுக்கும் இந்த வசதியை விரிவுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ ஏற்கனவே பரவலான பயன்பாட்டைக் கண்டிருக்கும் ஒரு நேரத்தில் இந்திய சந்தையில் ஆப்பிள் பே நுழைந்துள்ளதால் பயனாளர்களை கவர சலுகைகளை அள்ளி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் ஐபோனில் உள்ள வாலட் செயலியில் பிளஸ் குறியீட்டைக் கிளிக் செய்து பின் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் பின் நம்பர், என்ன பொருள் என்பதெல்லாம் உள்ளீட தேவையில்லை. 

ஐபோன் XR மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் இந்த ஆப்பிள் பே வசதி செயல்படும் எனவும். watchOS 11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புடன் கூடிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 உள்ளிட்ட மாடல்களில் இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget