மேலும் அறிய

Activa 125: ஆட்டோமேடிக் இன்ஜின் ஆஃப், 50 கிமீ மைலேஜ், குறைக்கப்பட்ட விலை - ஆக்டிவா 125 சுவாரஸ்ய தகவல்கள்

Activa 125 Scooter: ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பாக, பயனர்கள் அறிய வேண்டிய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Activa 125 Scooter: ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆக்டிவா 125 ஸ்கூட்டர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவிற்கும் முதலாவதாக வரும் அளவிற்கு, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ப்ராண்ட் பிரபலமடைந்துள்ளது. புதிய எடிஷனான ஆக்டிவா 125 ஆனது முந்தைய 110 எடிஷனை காட்டிலும், கூடுதல் சக்தி வாய்ந்தது. இந்நிலையில் இந்த வாகானத்தை வாங்குவதற்கு முன்பாக, பயனர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆக்டிவா 125 ஸ்கூட்டர் - முக்கிய தகவல்கள்

1. ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளதா?

ஆம், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும் பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் இடம்பெற்றுள்ளன.

2. சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் வசதி உள்ளதா?

ஆம், ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் வசதி உள்ளது. இது சைட்-ஸ்டாண்ட் கீழே இருக்கும்போது இன்ஜினை ஆஃப் செய்வது மட்டுமின்றி, வாகனம் மீண்டும் ஸ்டார்ட் ஆவதையும் தடுக்கிறது.

3. ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ளதா?

ஆம், ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்த உதவும் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பொத்தனை அழுத்தவதன் மூலம் உடனடியாக ஸ்டார்ட்/ஸ்டாப் நிலைக்கு கொண்டு செல்லலாம்.

4. TFT டிஸ்பிளே உள்ளதா?

வாகனத்தின் உமிழ்வு தொடர்பான தகவல்கள் உடன்  அழைப்புகள், இசை மற்றும் நேவிகேஷன் பற்றிய தகவல்களைக் காட்டும் 4.2-இன்ச் ப்ளூடூத் வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட TFT டிஸ்ப்ளேவையும் ஆக்டிவா 125 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

5. என்னென்ன வண்ண விருப்பங்கள் கிடைக்கின்றன?

ஹோண்டா ஆக்டிவா 125 இரண்டு வேரியண்ட்களிலும் ஆறு வண்ண விருப்பங்களிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிவப்பு, மேட் க்ரே, மேட் க்ரீனிஷ் - க்ரே, கருப்பு, வெள்ளை மற்றும் அடர் நீலம் ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

6. ஆற்றல் வெளியீடு

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில்  123.9சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்ட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.4hp மற்றும் 10.5Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.

7. குறைக்கப்பட்ட விலை

ஹோண்டா ஆக்டிவா 125 விலை H-ஸ்மார்ட் வேரியண்டிற்கு ரூ.88,339 ஆகவும், DLX வேரியண்டிற்கு ரூ.91,983 ஆகவும் உள்ளது. ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக இந்த ஸ்கூட்டரின் மீது பயனாளர்கள் ரூ.8,259 வரை சேமிக்கலாம்.

8. ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் மைலேஜ்

ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு சராசரியாக 45 முதல் 50 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. இது நகர மற்றும் நெடுஞ்சாலைகள் என பயன்படுத்தப்படும் சாலைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. வாகனத்தில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. அதனை முழுமையாக சார்ஜ் செய்தால், சுமார் 260 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 118 கி.மீ., ரேஞ்ச்.. Honda activa e vs Ampere magnus grand மைலேஜில் எது பெஸ்ட்? விலை என்ன?
சிங்கிள் சார்ஜில் 118 கி.மீ., ரேஞ்ச்.. Honda activa e vs Ampere magnus grand மைலேஜில் எது பெஸ்ட்? விலை என்ன?
ஒரே சார்ஜில் 159 கி.மீ. ரேஞ்ச்.. மைலேஜில் எது டாப்? விலையில் எது ஒர்த்? Yamaha Aerox-E vs TVS X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (A to Z) ஒப்பீடு
ஒரே சார்ஜில் 159 கி.மீ. ரேஞ்ச்.. மைலேஜில் எது டாப்? விலையில் எது ஒர்த்? Yamaha Aerox-E vs TVS X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் (A to Z) ஒப்பீடு
அறிமுகமாகியது ஆவலுடன் எதிர்பார்த்த Nissan Teckton..! பட்ஜெட் விலையில் ராஜ வசதிகள்..!
அறிமுகமாகியது ஆவலுடன் எதிர்பார்த்த Nissan Teckton..! பட்ஜெட் விலையில் ராஜ வசதிகள்..!
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச், 15 நாளில் 25,000 புக்கிங்- Oben Rorr EVO மின்சார பைக்கின் மிரட்டல் அம்சங்கள்!
ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச், 15 நாளில் 25,000 புக்கிங்- Oben Rorr EVO மின்சார பைக்கின் மிரட்டல் அம்சங்கள்!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
Embed widget