மேலும் அறிய

Aeris Vs Dzire: கெத்தாக வந்த டாடா ஏரிஸா.? மாஸ் காட்டிவரும் மாருதி சுசுகி டிசையரா.? எந்த கார் பெஸ்ட்.? ஒப்பீடு இதோ

Tata Aeris vs Maruti Suzuki Dzire Comparison: அதிகபட்ச பாதுகாப்பான காராக களமிறங்கியுள்ள டாடா ஏரிஸ், மாருதி சுசுகி டிசையருடன் போட்டியிட உள்ளது. இந்த இரண்டு கார்களில், கொடுக்கும் பணத்திற்கு எது சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை இப்போது அலசுவோம்.

'சப்-காம்பாக்ட் செடான்' (Sub-Compact Sedan) பிரிவில் இதுவரை 'மாருதி சுஸுகி டிசையர்' (Maruti Suzuki Dzire) மட்டுமே அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இது, தனது பிரிவில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக அளவில் விற்பனையாகும் காராகவும் திகழ்கிறது. இந்நிலையில், 'டிகோர்' (Tigor) மாடலை விட குறைவான மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 'ஏரிஸ்' (Aeris) மூலம், டாடா நிறுவனம் இந்த பிரிவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முற்படுகிறது. இவ்விரு கார்களுக்கும் இடையிலான ஒரு சுருக்கமான ஒப்பீடு இதோ.

எந்த கார் பெரியது.?

இரண்டு கார்களின் நீளமும் 4 மீட்டருக்கும் குறைவு (அதாவது 3995 மிமீ). ஆனால், அகலத்தைப் பொறுத்தவரை, Aeris-ன் 1684 மிமீ உடன் ஒப்பிடுகையில், Dzire 1735 மிமீ அகலத்துடன் பெரியதாக உள்ளது. இரண்டின் வீல்பேஸும் (wheelbase) 2450 மிமீ என்ற அளவில் சமமாக உள்ளது. அதே சமயம், தரை இடைவெளி (Ground Clearance) என்று பார்த்தால், Dzire-ன் 163 மிமீ-உடன் ஒப்பிடுகையில் Aeris 170 மிமீ அளவைக் கொண்டுள்ளது.

எந்த கார் அதிக சக்தி வாய்ந்தது.?

இந்த இரண்டு கார்களிலும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது; இதில் Aeris 86 bhp திறனையும், Dzire 82 bhp திறனையும் வெளிப்படுத்துகின்றன. CNG வகையைப் பொறுத்தவரை, Aeris 76 bhp திறனையும், Dzire 70 bhp திறனையும் கொண்டுள்ளன. இரண்டு கார்களிலும் CNG மற்றும் மேனுவல் (Manual) ஆகிய வகைகளில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும் போது, ஏரிஸ் அதிக திறனை கொண்டுள்ளது.

எந்த கார் அதிக மைலேஜ் தரும்.?

பெட்ரோலில், லிட்டருக்கு 25.7 கி.மீ மைலேஜ் மற்றும் CNG-யில் கிலோவிற்கு 36.47 கி.மீ மைலேஜ் என, டிசையர் அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது. ஏரிஸ் லிட்டருக்கு 19.2 கி.மீ மற்றும் கிலோவிற்கு 28.06 கி.மீ மைலேஜ் கொண்டது. இருப்பினும் நாங்கள் உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம்.

எந்த காரில் அதிக அம்சங்கள் உள்ளன.?

அம்சங்களை பொறுத்தவரை, ஏரிஸில் 10.25 அங்குல தொடுதிரை, 360 டிகிரி கேமரா, காற்றோட்ட இருக்கைகள், டாஷ்கேம் மற்றும் பல உள்ளன. அதே சமயம், டிசையரில் 9 அங்குல தொடுதிரை, 360 டிகிரி கேமரா, கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

எந்தக் கார் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது.?

Aeris காரின் விலை 5.2 லட்சம் ரூபாய் முதல் 9.7 லட்சம் ரூபாய் வரையிலும், Dzire காரின் விலை 6.3 லட்சம் ரூபாய் முதல் 9.5 லட்சம் ரூபாய் வரையிலும் உள்ளது. Aeris கார் ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதில், CNG வசதி இருந்தாலும், அது காரின் டிக்கி (boot space) இடவசதியைப் பாதிக்காது. அதே சமயம், Dzire கார் அதிக எரிபொருள் சிக்கனமும், கூடுதல் இடவசதியும் கொண்டது. மேலும், இதன் என்ஜின் மிகவும் மென்மையான செயல்பாட்டிற்கு பெயர் பெற்றது.

இவ்விரண்டு கார்களில், அடிப்படை வேரியண்ட்டை பொறுத்தவரை ஏரிஸ் மலிவானதாகவும், டாப் ஸ்பெக்கில் இரண்டு கார்களுக்கும் வெறும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வித்தியாசம் உள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோவில், ஏரிஸ் காரின் மீது 20 டன் அளவிற்கு பாறைகள் கொட்டப்பட்டு, அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, அம்சங்கள் அடிப்படையிலும், பாதுகாப்பு அடிப்படையிலும் பார்த்தால், ஏரிஸ் சற்று மேலோங்கி இருக்கிறது.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
Toyota Hyryder: திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
திடீரென விலையை உயர்த்திய டொயோட்டா..! எந்த காருக்கு தெரியுமா? அதுவும் ரூ.1.5 லட்சமா?
MG Windsor EV: கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
கூடுதல் ரேஞ்சிற்காக பெரிய பேட்டரியுடன் வரும் எம்ஜி விண்ட்சர் - வசதிகளும், விலையும் - லாஞ்ச்?
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அன்பில் மகேஷிற்கு ஜாமின் வருமா? வராதா? தொடரும் இழுபறி - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Thiruparankundram: உச்சநீதிமன்ற உத்தரவு; திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? என்ன செய்யப்போகிறது விஜய் அரசு?
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
Karthigai Deepam: அரோகரா... களைகட்டியது கார்த்திகை தீபம்! கோயில்களில் குவியும் பக்தர்கள்! சந்தையிலும் விற்பனை படுஜோர்!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
அரோகரா முழக்கம்.. அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அரோகரா முழக்கம்.. அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
Embed widget